History

ஆலயம் – நம் முன்னோர் வாழ்வில் – ஒரு கண்ணோட்டம்

பள்ள மொளச்சூரில் கூட்டுக் குடும்பங்களாய் வசித்து வந்த நம் முன்னோர் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் அதாவது 1890 களில் தற்பொழுது நாம் குடியிருக்கும் மேட்டுப்பாங்கான இடத்திற்கு (மொளச்சூருக்கு) வந்து குடியேறினார்கள்.

“கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்” “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்ற பழமொழிகளுக்கு ஏற்ப தற்பொழுது நமது பங்கு ஆலய கொடி மரம் உள்ள இடத்தில் சீமை ஓடுகளால் வேயப்பட்ட சிற்றாலயம் ஒன்றை இங்கு குடியேறிய உடனே எழுப்பினார்கள்.மொளச்சூர்இ பண்ணூர் பங்கின் கிளைப் பங்காய் இருந்தது.

நாளடைவில் குடும்பங்கள் பெருகவே செபவழிபாட்டிற்கு சிற்றாலய இடம் போதாமையால் சற்றுப் பெரிய ஆலயம் கட்டி எழுப்பவேண்டும் என்று ஊர் மக்கள் பங்குத்தந்தையரை வற்புறத்தத் தொடங்கினார்கள்.
1934 லிருந்து 1940 வரை பண்ணூர் பங்குத் தந்தையாக இருந்த அருள்திரு. இராயன்னா அடிகளாரும் 1940லிருந்து 1954 வரை பண்ணூர் பங்குத்தந்தையாக இருந்த அருள்திரு. ளு.இருதயசாமி அடிகளாரும் தங்களது கிளைப்பங்கான மொளச்சூரில் நல்லதொரு ஆலயம் கட்டி எழுப்ப எடுத்த முயற்சிகளின் பலனாலும்இ மொளச்சூர் இறை மக்களின் ஒருமித்த ஆதரவாலும்இ உழைப்பாலும் 1940-ம் ஆண்டு ஜூலைத்திங்கள் 28-ம் நாள் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இவ்வாலயமும் சீமை ஓடுகள் கொண்டு வேயப்பட்டதெனினும் சிலுவை வடிவில் சற்று பெரிய ஆலயமாக மத்தியில் கும்ப வடிவத்துடம் கட்டப்பட்டது. நன்மை வாங்கும் பொழுது இறைமக்கள் முழந்தாளிட ஏதுவாக பலிபீடமேடையில் கிராதியும்இ அதன் இடப்புறத்தில் பிரசங்க மேடையும் எழுப்பப்பட்டது. புலிபீடமேடையைச் சார்ந்த பின்புறச் சுவரை ஒட்டி எழுப்பப்பட்ட பலிபீடத்தின் நடுவில் நற்கருணை பேழை அமைக்கப்பட்டது.

 

 

அதன் மேற்புறம் பாடுபட்ட சிலுவை வைக்கப்பட்டிருந்தது. நற்கருணை பேழையின் இருபறமும் பித்தளையால் செய்யப்பட்ட மெழுகுவர்த்தி தண்டுகளும்இ பித்தளையால் செய்யப்பட்ட மலர்ச் சாடிகளும் வைக்க படிக்கட்டுகளைப் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
அவ்வாலயம் அடித்தளம் இடப்பட்ட நாளின் பவளவிழாவினை சிறப்பான விதத்திலே கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம்இ அவ்வாலயம் நம் ஊர் இறை மக்களின் வாழ்வினை மையமாகஇ விசுவாசத்தின் ஊற்றாக எவ்வாறெல்லாம் இருந்தது என்பதை ஓரளவிற்காகவாவது அறிந்து கொள்வது நம் கடமை. குடும்பமே ஒரு கோயில் என்பார்கள். ஆயின் ஊரெ ஃ உலகமே ஒரு குடும்பமாய் நிலைக்க கருணை பொழியும் உயிருள்ள கடவுளின் உறைவிடமாய் இருப்பதே ஆலயம் என்பது நம் முன்னோரின் நம்பிக்கை. எனவே ஆண்டவரின் வீடு என ஆலயத்தைப் போற்றினார்கள்.

ஆதலால்தான் கோயில் வளாகத்தில் செங்கல் சூளை எழுப்பவும் ; சுண்ணாம்பு காரைஇ சாந்து இவற்றைத் தயாரிக்க உருளையை இழுக்கவும் வேலை செய்ய வீட்டிற்கு ஒருவர் என ஆளனுப்பினார்கள்.

வாலாசாபாத் (சீவரம்) அருகில் ஓடும் பாலாற்றிலிருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் ஓட்டினார்கள். ஆலய கட்டுமான பணிகளுக்கு தங்கள் வீடுகளிலிருந்து ஆளனுப்பி உதவினார்கள். பொருளுதவியும் புரிந்தார்கள். இவ்வாறு பங்குத் தந்தையரோடு ஊர் மக்கள் ஒத்துழைத்ததால் விரைவில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.
மொளச்சூர் ஒரு கிளைப்பங்காய் இருந்தாலும்இ பல்வேறு கினைப் பங்குகள்இ பண்ணூர் பங்குத் தந்தையின் பொறுப்பில் இருந்தாலும்இ ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலி மட்டுமே ஆலயத்தில் நடைபெற்று வந்தது.
ஒவ்வொரு சனிக்கிழமை மாலை இ வாரத்திற்கு ஒரு குடும்பத்தினர் தங்களது ஒரு ஜோடி எருதுகளைக் கொண்டு வந்து ஆலய வளாகத்தினுள் இருக்கும் கூடு வண்டியில் பூட்டி பண்ணூர் பங்குத்தந்தையின் இல்லத்திற்கு ஓட்டிச்சென்று பங்குத் தந்தையை மொளச்சுர் ஆலயத்திற்கு அழைத்து வருவர். சனிக்கிழமை மாலை பங்குத் தந்தை பாவசங்கீர்த்தனம் கேட்பார்.
இரவு ஆலய வளாகத்தில் அவரது இல்லத்தில் தங்கி மறுநாள் ஞாயிறு காலை 6 மணி திருப்பலி நிறைவேற்றிவிட்டு உடனே பண்ணூருக்கு கூடு வண்டியில் சென்று விடுவார்.
மற்ற நாட்களிலோ விழாக் காலங்களிலோ திருப்பலி காணவும் மற்ற வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளவும் பண்ணூர் பங்கு ஆலயத்திற்கு இங்கிருந்து இறைமக்கள் கூட்டம் கூட்டமாய் குறுக்கு வழியில் நடந்து செல்வர்.

மொளச்சூர் தனிப்பங்காக மாற்றம் பெற்று 08.09.1953-ல் அருள்திரு. து.யு.ராஸ் அடிகளார் பங்குத் தந்தையாக பொறுப்பேற்ற பிறகு மொளச்சூர் ஆலயத்தில் தினமும் திருப்பலி நிறைவேற்றப் படலாயிற்று.

அந்நாட்களில் இலத்தீன் அதிகாரபூர்வமான வழிபாட்டு மொழியாய் இருந்ததால் திருப்பலி இலத்தீன் மொழியிலேயே நடைபெற்று வந்தது. பீடச் சிறுவர்கள் குரவானவருக்கு திருப்பலியில் பதிலளிக்க இலத்தீன் செபங்களைக் கற்றிருந்தார்கள்.

திருவழிபாட்டு நிகழ்ச்சிகளையெல்லாம் குருவானவர் இறை மக்களுக்கு முதுகைக் காட்டியவாறும் சுவற்றோடு சேர்ந்திருக்கும் பீடத்தை நோக்கியவாறும் நின்று நிகழ்த்துவார். எனவே இறைமக்கள் செபமாலை செபித்தும்இ வேறு செபங்களைச் சொல்லியவாறும் இருப்பார்கள். திருப்பலியிலும் மற்ற வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் ஆண்கள் பாடகர் குழவினர் இலத்தீன்இ தெலுங்குஇ தமிழ் பாடல்களை நேர்த்தியாக பாடக் கற்றிருந்தனர்.
விவசாயமே ஊர் மக்களின் முழு நேரத் தொழிலாய் இருந்தது. நன்செய்இ புன்செய் தானியங்களை தங்கள் நிலங்களில் விதைத்தனர். வானம் பார்த்த பூமியாய் இருந்ததால் மழை காலங்களில் நெற்பயிரும்இ மற்ற காலங்களில் புன்செய் தானியங்களையும் பயிர் செய்தார்கள். எல்லா அறுவடையின்போதும் முதலில் ஆலயத்திற்கும்இ உபதேசயாருக்கும் என்று தங்கள் விளைச்சலில் ஒரு பங்கினை அளித்தார்கள்.

கோடை காலங்களில். விவசாய வேலைகளிலிருந்து ஓய்ந்திருக்கும் பொழுதுஇ வெளியிலிருந்து நாடக ஆசிரியர்களை வரவழைத்து மாலை வேலையில் ஆலய வளாகத்தினுள் முதியோரும்இ இளைஞர்களும் நாடக் பயிற்சி எடுத்துக் கொள்வதுடன் அக்கம் பக்கம் கிராமத்தினரையும் வரவழைத்து நாடகம் நடத்துவார்கள். ஊரின் பாதுகாவலராம் புனித சூசையப்பரின் திருவிழா ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். திருவிழாவிற்கு முன்னரோ பின்னரோ நாடகம் நடத்துவர்.

வெளியிலிருந்து பாகவதர்களை வரவழைத்து விவிலிய நிகழ்ச்சிகளை ஒரு வீட்டில் ஒரு நாள் என்று இரவில் உபன்யாசம் (சொற்பொழிவு) நிகழ்த்தச் செய்வார்கள். அக்காலத்தில் படிக்காதவர்கள் பெரும்பாலோராயிருந்தனர். 5-ம் வகுப்பிற்கு மேல் படித்துவர்கள் ஒரு சிலரே இருந்தனர். படிப்பதற்கு விவிலிய புத்தகங்கள் கிடைக்காத நிலை எனினும்இஆபிரகாம்இ யாக்கோபுஇ யேசேப்புஇ மோசேஇ தாவீதுஇ யோபுஇ தோபித்துஇ தானியேல் முதலிய விவிலிய முதபெரும் தலைவர்களின் வரலாற்றை இத்தகைய உபன்யாச நிகழ்வுகளின் மூலம் அனைவரும் அறிந்திருந்தனர்.


ஆலயம் கட்டி முடிக்கப்பட்டதும்இ பழைய சிற்றாலயம் பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டது.
மரங்களின் நிழலிலும்இ ஆலய வாசலுக்கு முன் இருந்த மணல் தரையிலும் அமர்ந்து சிறுவர்இ சிறுமியர் மணல் தரையில் தம் கைவிரல்களால் எழுத்துக்களை எழுதி பயிற்சி எடுப்பது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

“ஆத்திச்சூடி” கொன்றைவேந்தன்இ மூதுரைஇ நல்வழி முதலியவற்றிலிருந்து பழமொழிகளை ஒருவர் சொல்ல மற்றவர்கள் அதனை உரக்கத் திருப்பிச் சொல்லிக்கற்றனர். அந்த நினைவுகள் இன்றும் பசுமையாய் உள்ளன.

ஆலயத்தையும்இ ஆலய வளாகத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளவும்இ பாதுகாக்கவும்இ காலையிலும்இ மாலையிலும்இ ஆலயத்தினுள் செபங்களைச் செபிக்கவும். பாடவும் ஒவ்வொரு ஆலயத்திற்கும் பங்குத் தந்தையர் வேதியரை (உபதேசயாரை) நியமித்திருந்தனர்.

ஒவ்வொரு குடும்பத்தனரிடமிருந்தும் காணிக்கையாக தானியங்களைப் பெறுவதும் அவர்களின் பணியாயிருந்தது.

பக்திஇ ஆர்வம்இ ஒழுங்கு முதலியவை மக்கள் உள்ளத்தில் தோன்றுமாறுஇ திறமையுடன்இ செபங்களைச் செபித்தும்இ பாடல்களைப் பாடியும் இறை மக்கள் விசுவாசத்திலும்இ நம்பிக்கையிலும் வளரஇ வேரூன்ற வேதியர்கள் பெரிதும் உழைத்தனர். சிறுவர்இ சிறுமிகளுக்கு செபங்கள் மற்றும் மறைக்கல்வி கற்றுத்தந்தனர்.

கத்தோலிக்கத் திருச்சபையின் பல்வேறு நம்பிக்கைகளையும்இ விசுவாசக் கோட்டுபாடுகளையும்இ ஆராதனைஇ வழிபாடு முறைகளையும் இறைமக்கள் பின்பற்ற பங்குத்தந்தையர்களுக்கு வேதியர்களும் பெரிதும் துணைநின்றனர். இங்கு உழைத்த அத்தகைய வேதியர்கள் சிலரைப்பற்றி இங்கு குறிப்பிடுவது நாம் அவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாகும்.

 


வேதியர்கள் பணிசெய்த காலத்தை இரு பிரிவுகளாகப் பிரித்துப் பார்ப்பது சிறப்பானதாக இருக்கும் என எண்ணுகிறேன் :-
1. மொளச்சூர் கிளைப்பங்காய் இருந்த காலம்
2. மொளச்சூர் தனிப்பங்காய் உருவான பிறகு இதுநாள் வரையிலுமான காலம்.

மொளச்சூர் கிளைப்பங்காய் இருந்த காலத்தில் மூன்று உபதேசியார் என நினைவிற்கு வருகின்றனர். சுpறு வயதில் நான் நேரில் பார்த்த நன்கு அறிந்த மொளச்சூர் உபதேசியார் திரு. கொத்தி லூர்து ராஜன்னா மட்டுமே. இவர் அருள்திரு. இராயன்னா அடிகள் மற்றும் அருள்திரு ளு. இருதயசாமி அடிகள் பண்ணூர் பங்குத் தந்தையாக இருந்த காலத்தில் மொளச்சூர் புனித சூசையப்பர் ஆலய உபதேசியராக இருந்தார். அக்காலத்தில் ஊரில் தெருக்களுக்கு பெயர்கள் கிடையாது. இப்பொழுது இராயப்பர் தெரு என்று அழைக்கப்படும் அப்பகுதியில் பெரிய உபதேசியார் என அழைக்கப்பட்ட அவரது தம்பி புட்டி. செவரய்யா அவர்களும் வசித்து வந்தனர். சிறுவயதில் அவர்களது வீட்டைக் கடந்து செல்லும் பொழுது அதோ பெரிய உபதேசியார். ஆதொ சின்ன உபதேசியார் என முதிர்ந்த வயதினரான அவர்களைக் காட்டிச் சொல்வார்கள்.
உபதேசியார் : பக்தியிலும்இ ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினார்கள். தன்னைப் பற்றியும்இ தன் குடும்பத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிராமல்இ சேவை உள்ளம் கொண்டவர்களாய் விளங்கினாhகள். அர்ப்பண உணர்வோடும்இ பொறுப்புணர்ச்சியோடும் தங்கள் பணிகளைச் செய்தார்கள். சிறுவர்இ சிறுமிகளின் ஆன்மீக வளர்ச்சிக்கு முதலிடம் தந்து அவர்களுக்குத் தேவையான நல்லொழுக்கப் பயிற்சியினையும் தந்தார்கள்.
எனவே ஊரில் உபதேசியாருக்கு மக்களிடம் நல்ல மதிப்பும்இ செல்வாக்கும் இருந்தது. ஊரில் நடைபெறும் அனைத்து நற்காரியங்களிலும் முதன்மை இடத்தை அவருக்கு தந்தனர். உபதேசியார் செபம் சொல்லி எல்லா நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைப்பார். திருமண நிகழ்ச்சிகளில் நடைபெறும் மணமகன்இ மணமகள் வரவேற்பு நிகழ்ச்சியின்போது உபதேசியார் சொல்லும் மந்திரம் இனிமையானதாய்இ இரட்சிக்கும்படியாய் இருக்கும். அடக்கச் சடங்குகளில் அவர் சொல்லும் செபங்களும்இ பாடல்கள் உருக்கமானதாய் இருக்கும்.

1953 செப்டம்பரில் மொளச்சூர் தனிப்பங்களாக உருவாகி அருள்திரு. து.யு. ராஸ் அடிகள் பங்குத் தந்தையாக வந்த பிறகு திரு. கொத்தி லூர்து ராஜன்னா உபதேசியார் பொறுப்பிலிருந்து விலகினார். பிறகு பெரிய உபதேசயாரின் மகன் புட்டி. ஞானப்பிரகாசம் சில ஆண்டுகள் உபதேசியராகப் பணியாற்றினார். அவருக்குப் பிறகு வேதியர் பயிற்சி பெற்றவர்களே மொளச்சூர் பங்கு ஆலயத்தில் உபதேசியராகப் பணியாற்றினார்கள்.

அவர்கள் :

திரு. ஜோசப்இ திரு – முடியப்பன்இ திரு. பத்திநாதன்இ திரு. மைக்கேல்.
இவர்கள் பங்குத் தந்தையின் நேரடி மேற்பார்வையில் பணியாற்றினார்கள். இவர்கள் பங்கு ஆலயத்தில் மட்டும் பணிபுரியாமல் கிளைப் பங்குகளுக்கும் சென்று வந்தனர். அங்கிருந்த சிறுவர் சிறுமிகளுக்கு மறைக் கல்வி போதித்தனர். இவர்கள் வேதியர் பயிற்சி பெற்றிருந்ததால் மக்களைப் பாடவும்இ வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நல்ல முறையில் செபங்களைச் செபிக்கவும் பயிற்றுவித்தனர்.
2003-ல் வேதியர் திரு. மைக்கேல்இ மாற்றலாகி பூவிருந்தவல்லி சென்றார். அதன்பின் பயிற்சி பெற்ற வேதியர் எவரையும் நம பங்கிற்கு நம் மறை மாவட்டம் வேதியராக அனுப்பவில்லை.

2004லிருந்து திரு து. அந்தோணிமுத்துசாமி உபதேசியாராக நம் பங்கில் சிறந்த முறையில் பணியாற்றி வருகின்றார்.
நல் ஆலய பவளவிழாவினைச் சிறப்பிக்கும் இத் தருணத்தில் நமது பாரம்பரியத்தையும்இ கலாச்சாரத்தையும்இ கட்டிக்காக்குவம் இறைவார்த்தை மற்றும் ஆசீரியம் காட்டிய வழியில்
ஒழுகிடவும் நம் உடன் இருந்து நமக்கு துணை புரிந்த இவர்கள் அனைவரையும் நன்றியுடன்
நினைவு கூறுவோம்.
நம் முன்னோர்களும்இ வேதியர்களும் காட்டிய விசுவாச ஒளியில் நம் இறைப் பயணம் தட்டின்றித் தொடர இந்நினைவலைகள் நமக்கு உதவட்டும்.

இயேசுவுக்கே புகழ்
மரியே வாழ்க.

பெஞ்சமின் மல்லவரபு
சவேரியார் அன்பியம்

வேதியர்கள்


புட்டி ஞானப்பிரகாசம்

ஐ.ஸ்டீபன் முடியப்பன்

அந்தோணிமுத்துசாமி